ராகவேந்திர சுவாமிகள் அவதார விழா
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் கிளை மடம் உள்ளது. இங்கு ராகவேந்திர சுவாமிகளின் அவதார தின விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது.மூலவர் ராகவேந்திர சுவாமிகள் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி, தன்வந்தரி, சிவபார்வதி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின், சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.