தென்னிந்திய யோகா போட்டி; கும்மிடி மாணவர்கள் அசத்தல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்,அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன.தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். வயது வாரியாக,16 பிரிவுகளாக, ஆண், பெண் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வினாஸ்ரீ யோகா மைய மாணவர் எம்.ஹரிஷ், 12, மாணவி எஸ்.ஜெய் ஸ்ரீதனா, 9, ஆகியோர் 'சாம்பியன்' பட்டம் வென்றனர்.அந்தந்த வயதுபிரிவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.