மேலும் செய்திகள்
மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை
18-Aug-2024
குன்றத்துார்:தாம்பரம் அருகே செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காணிக்கை ராஜ், 52. இவர், தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் அமைந்துள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடையில் இயங்கும் மதுக்கூடத்தில் சப்ளையராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில், மது குடிக்க வந்தவர்களுக்கும் காணிக்கை ராஜிற்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.இதை பார்த்த சக ஊழியரான வினோத், 31, என்பவர் தடுக்க சென்றார். அப்போது தகராறில் ஈடுபட்ட நபர்கள், வினோத்தை தாக்கி சென்றாக கூறப்படுகிறது.இதையடுத்து, 'உன்னால் தான் எனக்கு பிரச்னை' எனக்கூறிய வினோத், காணிக்கை ராஜிடம் தகராறில் ஈடுபட்டு, மார்பில் எட்டி உதைத்துள்ளார். இதில் கீழே விழுந்த காணிக்கை ராஜிற்கு, பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து மணிமங்கலம் போலீசார், காணிக்கை ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18-Aug-2024