மேலும் செய்திகள்
விழுப்புரம் கிளைச் சிறையில் விசாரணை கைதி சாவு
10-Aug-2024
காஞ்சிபுரம்:சென்னையில் இருந்து, வேலுார் நோக்கி, 'கீயா' கார் நேற்று காலை 9:00 மணி அளவில் சென்றுக்கொண்டிருந்தது. காரை, சென்னை பெரம்பூரைச்சேர்ந்த ராஜ்குமார், 52.என்பவர் ஓட்டிச் சென்றார்.பொன்னேரிக்கரை அருகே, கார் தாறுமாறாக ஓடியது. இதில், சைக்கிளில் சென்ற கல்லுாரி மாணவர் மற்றும் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்மணி ஆகிய இருவர் மீது மோதி, சாலை ஓரத்தில் மோதி நின்றது.தகவல் அறிந்த, பொன்னேரிக்கரை போலீசார், காரில் மயங்கி கிடந்தவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பொன்னேரிக்கரை போலீசார் விசாரித்துவருகின்றனர்.
10-Aug-2024