உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரும்பு கம்பி ஏற்றிவந்த டிராக்டர் ஒரகடம் சாலையில் கவிழ்ந்து விபத்து

இரும்பு கம்பி ஏற்றிவந்த டிராக்டர் ஒரகடம் சாலையில் கவிழ்ந்து விபத்து

ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாத்தில் இருந்து, இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு, டிராக்டர் ஒன்று, ஒரகடம் வழியாக, படப்பை நோக்கி, சென்றது.வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் மேம்பாலத்தை கடந்து, ஜான்சன் லிப்ட் தொழிற்சாலை எதிரே வந்த போது, அதிகபாரம் ஏற்றிவந்த டிராக்டர், கட்டுபாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், டிராக்டர் வாகனத்தில் பின்பாகம் கவிழ்ந்ததில், அதில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை நடுவே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சாலை நடுவே கவிழந்த டிராக்டரால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து, சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படட்டன. இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி