விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இடமாற்றம்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இயங்கி வருகிறது. பழமையான இந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.இதற்கு 1.48 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்து, 4,596 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இதனால், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இருக்கும், காவல் நிலைய கட்டடத்தில் மாற்றப்பட்டு உள்ளது என, காஞ்சிபுரம் எஸ்.பி.,சண்முகம் தெரிவித்துள்ளார்.