மேலும் செய்திகள்
இன்று இனிதாக (04.01.2025) காஞ்சிபுரம்
04-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் வரும் 16ல் காணும் பொங்கல் தினத்தன்று 108 கோபூஜை பெருவிழாவும், சிவபெருமானின் அம்சமான அரச மரத்திற்கும், அம்பிகையின் அம்சமான வேம்பு எனப்படும் வேப்பமரத்திற்குள் திருக்கல்யாண வைபம் நடக்கிறது.காலை, 7:30 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், நவக்கிரஹங்கள், சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும், ருத்ராட்ச லிங்கபேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் கோபூஜை நடக்கும் இடத்திற்கு எழுந்தருள்கின்றனர். அங்கு 108 கோபூஜை நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு விநாயகர் பழத்தை வென்ற புராண நிகழ்ச்சியம், மாலை 5:00 மணிக்கு அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவமும், மஹாதீப ஆராதனையும், நடக்கிறது.
04-Jan-2025