மேலும் செய்திகள்
மளிகை கடையில் குட்கா உரிமையாளர் கைது
18-May-2025
படப்பை:ஆதனஞ்சேரியில் உள்ள மளிகை கடை ஒன்றில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.படப்பை, ஆதனஞ்சேரி, கலைஞர் நகரில் உள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதையடுத்து, மணிமங்கலம் போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மளிகை கடையில் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 13 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, கடை உரிமையாளர் கனகராஜ், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
18-May-2025