உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் காஞ்சியில் 164 பேர் ஆப்சன்ட்

பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் காஞ்சியில் 164 பேர் ஆப்சன்ட்

காஞ்சிபுரம்,:தமிழகம் முழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கியது. ஏப்ரல் 15 ம் தேதி வரை நடைபெறும் தேர்வுக்கான மொழித்தேர்வு நேற்று நடந்தது. முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும். மாணவ --- மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த தேர்வு மையங்களுக்கு, 56 முதன்மை காப்பாளர்கள், 93 பறக்கும் படையினர், கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 183 பள்ளிகளைச் சேர்ந்த, 7,502 மாணவர்களும், 7,836 மாணவியர், 232 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 315 தனித்தேர்வர்கள் என, 15,885 மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர். இதில் 164 மாணவர்கள் நேற்று மொழித்தேர்வில் 'ஆப்சன்ட்' ஆகினர்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, பி.எம்.எஸ்.,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், 'பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் மொபைல்போனை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. 'ஆள் மாறாட்டம், வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால், தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி