மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
25-Mar-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், உதவித்தொகை, ரேஷன் அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 625 பேர் மனு அளித்தனர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டரங்கு வெளியே தனியாக அமர வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் இல்லங்களில் பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு அட்டை வழங்கி, நீரில் மூழ்கி உயிரிழந்த உத்திரமேரூர் தாலுகா, வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த, வள்ளியம்மாள் என்பவரின் கணவர் மதுரை என்பவருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 1 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.தொடர்ந்து, அரசு பணியாளர் தேர்வாணையத்தில், குரூப் - 4 வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, ஒன்பது தட்டச்சர்களுக்கு ஊராட்சி வளர்ச்சி பிரிவில் பணி நியமன ஆணையை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி கலெக்டர் மிருணாளினி உட்பட பலர் பங்கேற்றனர்
25-Mar-2025