உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலெக்டர் அலுவலகத்தில் சட்டையை கழற்றி மனு அளித்த நபரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் சட்டையை கழற்றி மனு அளித்த நபரால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில், திடீரென ஒருவர் சட்டையை கழற்றி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு, பட்டா என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டம் நடந்துக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் சட்டையை கழற்றி விட்டு மனு அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர்களும், போலீசாரும் அவரை கூட்டரங்கு வெளியே அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, தன் பெயர் குமார் எனவும், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில், தனது 5 சென்ட் இடத்தில் கட்டியிருந்த சுற்றுசுவரை இடித்து ஊராட்சி தலைவர் அராஜகம் செய்வதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி