மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?
22-Jun-2025
சிறுவள்ளூர்:சிறுவள்ளூர் கிராம பொது குளத்திற்கு பெயரளவிற்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. மீதி பகுதிகளுக்கு சுற்றுச்சவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, சிறுவள்ளூர் கிராமத்தில் பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் நீரை பயன்படுத்தி, ஆடு, மாடுகளுக்கு தாகம் தீர்க்கவும், நீர் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.இந்த குளத்தை சுற்றிலும் கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 2.81 லட்சம் ரூபாய் செலவில், 90 மீட்டர் குளத்தை சுற்றிலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.எஞ்சி இருக்கும் பகுதியில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கவில்லை. இதனால், குளத்தின் கரையின் மண் சரிந்து, ஆழம் குறையும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி நிர்வாகம் ஆய்வு செய்து, எஞ்சி இருக்கும் நீளத்திற்கு குளக்கரை ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
22-Jun-2025