உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

கப்பாங்கோட்டூர்:மதுரமங்கலம் அடுத்த, கப்பாங்கோட்டூர் கிராமத்தில் இருந்து, எலுமியான்கோட்டூர் செல்லும் சாலையில், சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு ஓரத்தில், சுற்றியுள்ள கிராமத்தினர் சென்று வருகின்றனர்.இந்த சுடுகாடு அருகே போடப்பட்ட மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. மின்கம்ப கான்கிரீட் பெயர்ந்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது. பலமாக காற்று அடித்தால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது, மின் கம்பி அறுந்து விழும் அபாய நிலை உள்ளது.எனவே, மின் விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கிராமத்தினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ