உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நில மோசடி வழக்கு கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்

நில மோசடி வழக்கு கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்

காஞ்சிபுரம்:நடிகை கவுதமியின் அண்ணன் சொத்துக்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இறந்த காரணத்தால், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று நடிகை கவுதமி ஆஜரானார். திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில், கவுதமியின் தாயார் வசுந்தராதேவிக்கு சொந்தமான நிலத்தில், கவுதமியின் அண்ணனுக்கு சேர வேண்டிய, 1.26 ஏக்கர் நிலம் இருந்தது. இதை விற்பனை செய்ய அழகப்பன் என்பவருக்கு, 2015ல், கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த், அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலத்தை, 60 லட்சம் ரூபாய்க்கு அழகப்பன் விற்றுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்திற்கு அந்த தொகை கொடுக்கப்படவில்லை. சில மாதங்கள் கழித்து, இதே நிலத்தை, 1.63 கோடி ரூபாய்க்கு, கூட்டாளி ரகுநாதன் என்பவருக்கு விற்றுள்ளார். விற்பனை செய்த பணத்தையும் கொடுக்காமல், நிலத்தை ஏமாற்றி மோசடி செய்ததாக, ஸ்ரீகாந்த் பதிலாக கவுதமி, காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்படி, போலீசார் அழகப்பன், ரகுநாதன், சுகுமார் ஆகிய மூவர் மீதும், வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சுகுமார் இறந்துவிட்டதால், குற்றப்பத்திரிக்கையில் இருந்து அவரின் பெயரை நீக்குவது தொடர்பாக, நடிகை கவுதமிக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதுதொடர்பான, விசாரணைக்கு நடிகை கவுதமி, நேற்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை