மேலும் செய்திகள்
மாவட்ட ஊராட்சி செயலர் பொறுப்பேற்பு
27-Sep-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 55 ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுதும் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள், ஏராளமான ஊராட்சிகளில் காலியாகவே இருந்தன. இப்பணியிடங்கள் நிரப்பாமல் இருந்ததால், அருகில் உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதல் பணியாக, இரண்டு ஊராட்சி நிர்வாகங்களை கவனிக்க வேண்டிய நிலை இருந்தது. கிராம சபை கூட்டம், ஊராட்சி கூட்டம் போன்றவை நடக்கும் நாட்களில் பல சிரமங்கள் இருந்தன. ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான செயலர்களை விரைவாக நியமிக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் உட்பட, பல தரப்பினரும் ஊரக வளர்ச்சி துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுதும் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நவ.,10ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெறப்படும். தமிழகம் முழுதும், 1,483 இடங்கள் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 காலி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு, மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் வாயிலாக நேர்காணல் நடத்தி தேர்வு செய்வர்.
27-Sep-2025