உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மாநகராட்சியை கண்டித்து 18ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காஞ்சி மாநகராட்சியை கண்டித்து 18ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை:காஞ்சிபுரம் மாநகராட்சியை கண்டித்து, வரும் 18ல் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் கழிவுநீர் பிரச்னை, மற்றும் துாய்மைப் பணி சரிவர மேற்கொள்ளப்படாத காரணத்தால் சுகாதார சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டத்தால் சாலைகள் பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுற்று வருவதை கண்டும் காணாமல், காஞ்சிபுரம் மாநகராட்சி வேடிக்கை பார்த்து வருகிறது.இதை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் அகற்றும் கட்டணங்கள் உயர்வு, தொழில் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மோசமான சாலைகள் என்று, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரும் 18ம் தேதி, காலை 10 மணியளவில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் இதில் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ