உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை தடுப்பால் விபரீதம் சாய்ந்து விழுந்த மின்பெட்டி

சாலை தடுப்பால் விபரீதம் சாய்ந்து விழுந்த மின்பெட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில், பூமிக்கடியில் புதைவட கேபிள் வழித்தடம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவில் ராஜகோபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வடக்கு ராஜகோபுரம் அருகே, இரும்பால் செய்யப்பட்ட சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தடுப்பை வாகன ஓட்டிகள் அகற்றுவதை தவிர்க்க, இரும்பு சங்கிலி வாயிலாக அருகில் உள்ள மின்பெட்டியுடன் இணைத்து பூட்டு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், சாலை தடுப்புடன் சங்கிலி வாயிலாக இணைக்கப்பட்டு இருந்த மின்பெட்டி, அதன் பீடத்தில் இருந்து சாய்ந்து தரையில் விழுந்துள்ளது.இதனால், மின்கசிவு ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், சாய்ந்து கிடக்கும் மின்பெட்டியை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை