உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அண்ணா பல்கலை பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 அண்ணா பல்கலை பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலை பேராசிரியர்கள், கல்லுாரி வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலை கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை பல்கலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை என தெரிவித்து வந்தனர். சென்னையில் உள்ள பேராசிரியர்களை காட்டிலும், காஞ்சிபுரத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது போன்ற புகார்களை தெரிவித்தனர். இந்நிலையில் கல்லுாரியில் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று பேராசிரியர்கள், 13 பேர் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். கல்லுாரி வாசலில் நாற்காலியில் அமர்ந்தபடி, கோரிக்கை சம்பந்தமான பேனர்களை வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி