ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்உரிய கல்வித்தகுதி சான்று, ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 30க்குள் ஒப்படைக்க வேண்டும்.வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள மற்றும் பட்டியலினத்தவர்களுககு முன்னுரிமை வழங்கப்படும்.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல், உயிரியல், பொருளியல், கணினி பயிற்றுனர் ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 உள்ளன. மேலும், 12 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 17 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் உள்ளனர்.பள்ளி வாரியான காலிப் பணியிட விபரங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து விண்ணப்பிக்கலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.