நியமனம்
காஞ்சிபுரம்:காரைக்குடி அழகப்பா பல்கலை திட்டக் குழு உறுப்பினராக, காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசனை, தமிழக கவர்னர் ரவி நியமித்துள்ளார்.காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வராக, கலைராம வெங்கடேசன் பொறுப்பு வகித்து வருகிறார். சமயம் மற்றும் சமுதாயப் பணிகளை திறம்பட செய்தமைக்காக, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், கலைராம வெங்கடேசனுக்கு பல்வேறு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.இந்நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலை திட்டக் குழு உறுப்பினராக, சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசனை, தமிழக கவர்னர் ரவி நியமனம் செய்துள்ளார்.இவர், மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார் எனவும் தமிழக ஆளுநரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.