மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் துார்வார வலியுறுத்தல்
16-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஹோட்டல் தமிழ்நாடு, அரசு அருங்காட்சியகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பி.எஸ்கே., தெரு, ஆஸ்பிட்டல் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், கால்வாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், மேல்தளம் அமைக்கப்படாமலும் இருந்தது.இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இணைப்பு இல்லாத பகுதியில் கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 1.20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி, கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைக்கவும், இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தவும், மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஜூன் மாதம் துவங்கி பணி தீவிரமாக நடந்து வந்தது.இந்நிலையில், ரயில்வே சாலையில் உள்ள புற்றுநோய் மருத்துமவனை அருகே, மின்மாற்றி மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில், கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.கடந்த மாதம், சென்னை வட்டம், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், காஞ்சிபுரம் உட்கோட்ட பிரிவில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தபோது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் கால்வாய் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ரயில்வே சாலையில் மின்மாற்றி அமைந்துள்ள பகுதியில், வடிகால்வாய் கட்டுமான பணி முழுமை பெறாமல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், ரயில்வே சாலையில், மின்மாற்றி உள்ள இடத்தில், வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Oct-2024