உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெற்றோர் இழந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஏற்பாடு

பெற்றோர் இழந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஏற்பாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கல்வி மீளாய்வு கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் குறித்தும், அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி நிதியின் வாயிலாக கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும், உயர் கல்வி படிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.பெற்றோர் இழந்த நிலையில் உள்ள 28 மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து செலவினங்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து 2025ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 32 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், வட்ட கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை