உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு

புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், துாய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், பழைய துணிகள், பாய், பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர், டயர், தலையணை ஆகிய பொருட்களை, தீயிட்டு எரிப்பதை தவிர்ப்பது குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கழிவு பொருட்களை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, ஒவ்வொரு வார்டுக்கும் தனி குப்பை சேகரிப்பு தொட்டி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ