உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சி அம்மன் தங்கத்தேரில் பவனி

காஞ்சி காமாட்சி அம்மன் தங்கத்தேரில் பவனி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி உற்சவர் காமாட்சி அம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தங்கத்தேர் பவனி முடிந்ததும், கோலில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாரயணன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து செய்துள்ளனர்.சுக்ர வாரம், வெள்ளிக்கிழமையொட்டி இன்று வழக்கமாக நடைபெறும் தங்கத்தேர் பவனி இன்று இரவு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை