உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி

பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம், பெரிய காஞ்சி குளம் தெருவைச் சேர்ந்தவர் கிரிதரன், 19; டிரைவர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ‛டாடா ஏஸ்' டிரைவராக வேலை செய்து வந்தார்.நேற்று நள்ளிரவு, பணி முடிந்து வல்லத்தில் இருந்து. 'பல்சர்' பைக்கில் காஞ்சிபுரம் சென்றார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, சத்தியம் கிராண்ட் ஹோட்டல் அருகே சென்ற போது, கிரிதரன் சென்ற பைக் மீது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மொதியது.இதில், நிலைத்தடுமாறி விழுந்த கிரிதரன், அதே கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி, உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை