மேலும் செய்திகள்
இருளில் மூழ்கிய பழையசீவரம் மலை பஸ் நிறுத்தம்
15-May-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் மக்கள் பொதுநல அமைப்பினர் சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது.பழையசீவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமில், பழையசீவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 53 பேர் ரத்த தானம் செய்தனர்.இளைஞர்கள் தானம் செய்த ரத்தத்தை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் மக்கள் பொதுநல அமைப்பு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எழிலரசன் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமைப்பு நிர்வாகி வினோத்குமார், செல்வக்குமார், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15-May-2025