உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மாவட்டத்தில் 836 போலீசாருக்கு பஸ் பாஸ்

காஞ்சி மாவட்டத்தில் 836 போலீசாருக்கு பஸ் பாஸ்

காஞ்சிபுரம்:தமிழக போலீசார், அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 836 போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி, கடலுார் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் போலீசார் பயணம் செய்யலாம். நகர மற்றும் புறகநகர் பேருந்துகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டும் இந்த அட்டையை பயன்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விதித்துள்ளது.இந்த அட்டை போலீசாருக்கு பயனனுள்ளதாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி