உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

கா ஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர், ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம் வழியாக, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி செல்லும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். - கே.ரஜினிகாந்த், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை