புத்தேரி சுடுகாடு படுமோசம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி ஊராட்சியில், புத்தேரி துணை கிராம ஏரிக்கரையோரத்தில், புத்தேரி காலனிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது.இந்த சுடுகாட்டில், புத்தேரி காலனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை புதைக்கவும், எரிக்கவும் செய்து வந்தனர்.இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் தகன மேடை மற்றம் சுடுகாட்டில் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இதனால், இறந்தவர்களின் உடலை எரிக்கும் போது, கருவேல மரங்கள் இடையூறாக உள்ளன. மேலும், போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இருள் நேரத்தில் புதைக்க சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, புத்தேரி காலனி சுடுகாட்டிற்கு சுடுகாட்டிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.