உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நின்றிருந்த தனியார் பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து

நின்றிருந்த தனியார் பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, சாலையோரம் நின்றிருந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மீது, சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார், 20. கூடுவாஞ்சேரியில் தங்கி, தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம், ஒரகடத்தில் இருந்து சரக்கு வேனில், கார் உதிரி பாகங்களை ஏற்றி கொண்டு சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்றார். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு சந்திப்பு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மீது, சரக்கு வேன் மோதியது. இதில், சரக்கு வேன் முன்புறம் நெறுங்கியது. வாகனத்தை ஓட்டிவந்த அருண்குமார் பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் அனுமதிக்கப்பட்டார். ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை