உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிசிடிவி கேமராக்கள் சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்

சிசிடிவி கேமராக்கள் சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்:வெங்காடு கிராமத்தில் சேதமான, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வெங்காடு ஊராட்சி உள்ளது. தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இப்பகுதியில், ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, அடிக்கடி வழிப்பறி, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், சமீபத்தில் அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டது. இந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது அவை சேதமடைந்து, உடைந்து தொங்கிய நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேமரா செயல் படாததால் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் பெருகுவதற்கு வழிவகைகள் அதிகரித்து உள்ளன. எனவே, வெங்காடு ஊராட்சியில் சேத மடைந்துள்ள, 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை