மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா
26-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி மாநகராட்சி துவக்கப் பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் தேவசேனா தலைமை வகித்தார். ஆசிரியை தீபா முன்னிலை வகித்தார். 'இல்லம் தேடி கல்வி மையம்' காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மாநகராட்சி கவுன்சிலர் புனிதா சம்பத் பரிசு வழங்கினார்.* சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியின், 117வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். கல்வியாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சியும், மாணவர்கள், தாங்கள் வரைந்த ஓவியங்களின் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்ளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.* காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் மோகன்குமார் தலைமையில் நடந்தது. இதில், மாணவ - -மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு துணை மேயர் குமரகுருநாதன் பரிசு வழங்கினார்.
26-Mar-2025