மேலும் செய்திகள்
கீழம்பி கிராமத்தில் பொது குளம் சீரமைப்பு
31-Aug-2025
வாலாஜாபாத்:தேவரியம்பாக்கம் ஊராட்சியில், துாய்மையே சேவை சுகாதார தொடர்பான பணிகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் செப்., 17 முதல், அக்., 2ம் தேதி வரை, துாய்மையே சேவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திட்டத்தில், பொது இடங்களை துாய்மைபடுத்துதல், சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் குப்பை மேலாண்மையை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான துாய்மையே சேவை துவக்க நிகழ்ச்சி, வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று விழிப் புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது, கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் துாய்மையே சேவை உறுதிமொழி ஏற்றனர். அதை தொடர்ந்து, மரம் நடுதல் மற்றும் துாய்மை பணியில் ஈடுபடும் மாணவ - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்குதல், துாய்மை பணியாளர்கள் பாராட்டி கவுரவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் மற்றும் ஊராட்சி தலைவர் அஜய்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Aug-2025