புகார் பெட்டி செய்தி
தாமரை குளம் பகுதியில் நாய்கள் தொல்லை உ த்திரமேரூர் பேரூராட்சி, தாமரை குளம் பகுதியில், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை பயன்படுத்தி அப்பகுதி மக்கள், தினமும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இந்த பாதையில் எப்போதும், 10 க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் நடைபயிற்சிக்கு வருவோரை, குரைத்துக் கொண்டே துரத்துகிறது. சமீப நாட்களாக நாய்கள் சிலரை கடித்தும் வருகின்றன. இதனால், நடைபயிற்சி வருவோர் அச்சத்தோடு வந்து செல்கின்றனர். எனவே, தாமரை குளம் பகுதியில் நாய் தொல்லையை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- -------------------எஸ்.செல்வகுமாரி, உத்திரமேரூர்.