மேலும் செய்திகள்
தாழ்வான மின்சார கம்பிகளால் அபாயம்
24-Apr-2026
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பள்ள காலனியில் உள்ள தெரு மின் விளக்குகளை பராமரிப்பதற்காக மின் கம்பத்தின் அடிப்பாகத்தில் மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின்பெட்டியில், பியூஸ் கேரியர், மின் மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மின் இணைப்பு ஒயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. இவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மின்பெட்டியில் உள்ள மின் உபகரணங்கள் மற்றும் மின் ஒயர்களை தொட்டாலோ, சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மின் ஒயரில் உரசினாலோ மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூடி சீரமைக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- வி.கிருபாகரன், காஞ்சிபுரம்.
24-Apr-2026