உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான அறிவிப்பு பலகையை மாற்றியமைக்க வேண்டும்

சேதமான அறிவிப்பு பலகையை மாற்றியமைக்க வேண்டும்

வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் இருந்து பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலையில், வைப்பூர் செல்லும் இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பில் வைப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழிகாட்டி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில், அறிவிப்பு பலகை தற்போது முற்றிலும் சேதமடைந்து உள்ளது. பெயர் இல்லாமல் இரும்பு சட்டம் மட்டும் உள்ளதால், புதிதாக வருபவர்கள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி பெயர் பலகையை புதிகாக மாற்றி அமைக்க வேண்டும். - சி.முனுசாமி, வைப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !