உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

ஒரகடம் அருகே, காரணித்தாங்களில் இருந்து, பேரீஞ்சம்பாக்கம் கிராமத்திற்கு மின் கம்பங்கள் வழியே, மின் வழித்தடம் செல்கின்றன. இதில், காரணித்தாங்கல் பகுதியில் சாலையோரம் உள்ள 3 மின் கம்பங்களின் கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால், மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி. தியாகராஜன், காரணித்தாங்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ