உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயர் கோபுர மின் விளக்கு பழுது

உயர் கோபுர மின் விளக்கு பழுது

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்குவழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. வெள்ளைகேட் மேம்பாலத்தின் அருகே இருக்கும் உயர்கோபுர மின் விளக்கு மூன்று மாதங்களாக ஒளிரவில்லை. இதனால், வேலுார், தர்மபுரி, பெங்களூர், ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்லும் பயணியர், இரவு நேரங்களில் பேருந்திற்கு இருளில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. - தெ.ராகவன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !