உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

உத்திரமேரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் வழியாக, மின் வாரியத் துறையினர் மின் கம்பங்கள் நட்டுள்ளனர்.இந்த கம்பங்களில் உள்ள மின் கம்பிகளின் வழியே, அப்பகுதி விளைநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மின் வழித்தடம் செல்லும் பகுதியின் வழியே, அப்பகுதிவாசிகள் தினமும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள மின் கம்பம் ஒன்று முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.தற்போது, மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், பலத்த காற்று வீசும் நேரங்களில் சேதமடைந்துள்ள மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, சேதமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க, மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கே.சம்பத், தண்டரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ