உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிபோதையில் தகராறு: ஒப்பந்த ஊழியர் கொலை

குடிபோதையில் தகராறு: ஒப்பந்த ஊழியர் கொலை

காஞ்சிபுரம்:'குடி'போதையில் தகராறு செய்த ஒப்பந்த நிறுவன ஊழியரை கொலை செய்த ஒடிசா வாலிபர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரகடம் அடுத்த, மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார், 43, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் மேற்பார்வையாராக பணிபுரிந்து வந்தார். இவருடன், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த அஜாத் அலி, 24, என்பவருடன் ஜூலை 3 இரவு மாத்துார் குளக்கரை ஓரத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், 32, சந்தன், 26 ஆகிய இருவரும் குளக்கரை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்திரகுமாருக்கும், சந்தனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில், சந்தன் கையில் வைத்திருந்த கத்தியால், சந்திரகுமாரின் மார்பில் குத்தி உள்ளார். தடுக்க முயன்ற அஜாத் அலிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்த தகராறில், ராகுல் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். அந்த வழியாக சென்றவர்கள், காயமடைந்த சந்திரகுமார் மற்றும் அஜாத் அலி ஆகிய இருவரையும் மீட்டு, மாத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, சந்திரகுமார் உயிரிழந்தார். அங்கிருந்து, அஜாத் அலி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகராறில் காயமடைந்த சந்தன் என்பவரை ஒரகடம் போலீசார் மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !