புயல் எதிரொலி 2 விரைவு ரயில்கள் இன்று ரத்து
சென்னை: மோந்தா புயல் காரணமாக, புதுச்சேரி - புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் இரண்டு ரயில்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மோந்தா புயல் காரணமாக பயணியர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயிலின் இன்றைய ரயில் சேவையும், புதுச்சேரி - புவனேஸ்வர் நாளைய சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.