உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி மையம் முன் தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு

அங்கன்வாடி மையம் முன் தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு

உத்திரமேரூர்;மருதம் அங்கன்வாடி மையம் முன் தேங்கும் கழிவு நீரால், குழந்தைகளுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம் மருதம் கிராமத்தில், சுந்தரேஸ்வரர் கோவில் அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் பெண்களும் இணை உணவால் பயனடைகின்றனர். இந்நிலையில், சுந்தரேஸ்வரர் கோவில் முன் உள்ள சிறுமின்விசை குழாயில், அப்பகுதி மக்கள் குளிப்பதால் வெளியேறும் கழிவு நீரானது, அங்கன்வாடி மையம் முன் குளம் போல தேங்குகிறது. இதனால், குழந்தைகள் அங்கன்வாடி மையம் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. நீண்ட நாட்களாக தேங்கும் கழிவு நீரால் அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, மருதம் அங்கன்வாடி மையம் முன் கழிவு நீர் தேங்காதபடி, மண் கொட்டி பாதுகாக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ