உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாயின் தடுப்புச்சுவர் சேதம் விளைநிலத்தை மழைநீர் சூழும் அபாயம்

வடிகால்வாயின் தடுப்புச்சுவர் சேதம் விளைநிலத்தை மழைநீர் சூழும் அபாயம்

களியனுார்: களியனுாரில் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்வாயின் பக்கவாட்டு தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், களியனுாரில் உள்ள மழைநீர் கால்வாயின் பக்கவாட்டு தடுப்புச்சுவரில் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டும், ஒரு பகுதி சுவர் நிலத்தில் பிடிப்பு இல்லாமல் சரிந்து விழும் நிலையிலும் சேதமடைந்து உள்ளது. இதனால், கால்வாயில் அதிகளவு மழைநீர் செல்லும்போது, தடுப்புச்சுவரில் உடைப்பு ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் களியனுாரில், விரிசல் ஏற்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பக்கவாட்டு தடுப்புச்சுவரை சீரமைக்க, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ