உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.25 லட்சத்தில் டிஜிட்டல் திரை பகலில் கொர், இரவில் விழிப்பு

ரூ.25 லட்சத்தில் டிஜிட்டல் திரை பகலில் கொர், இரவில் விழிப்பு

காஞ்சிபுரம், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை, பயணியர் நடமாட்டம் அதிகம் உள்ள பகல் நேரத்தில் செயல்படாமல் முடங்கி உள்ளது.தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், 16 அடி அகலம், 10 அடி உயரத்தில், டிஜிட்டல் திரை எனப்படும் மின் சுவரை, 2023, செப்., 14ம் அமைச்சர்கள் சாமிநாதன், அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதில், தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும், பல்வேறு அறிவிப்புகளையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், செய்தி விளம்பரம், காலை, மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், டிஜிட்டல் திரை மின் சுவர், பகல் முழுதும் செயல்படாமல் முடங்கியுள்ளது. இரவில் மட்டுமே செயல்படுகிறது. பேருந்து நிலையத்தில் பயணியர் நடமாட்டம் அதிகம் உள்ள பகலில் செயல்படாமல், இரவில் மட்டுமே செயல்படுகிறது.இதனால், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 25 லட்சம் ரூபாய் செலவில், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனையை பகலில் வருவோர் அறிய முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் டிஜிட்டல் திரை செயல்படுகிறது. டிஜிட்டல் திரை அமைத்தபோது, பகல் நேரத்திலும் செயல்பட்டது.சூரிய வெளிச்சத்தில் தெளிவாக தெரியாததால், பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் நேரமான மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை டிஜிட்டல் திரை செயல்படுகிறது.பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் காலை நேரத்திலும் டிஜிட்டல் திரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி