மேலும் செய்திகள்
உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
28-May-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு இரண்டே நாட்களில் பழுதடைந்ததால், அப்பகுதிமக்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு நேதாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை சந்திப்பு வழியாக, திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், போதுமான வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.இதனால், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒதுக்கீடு செய்த 7.50 லட்சம் செலவில், நேதாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பயன்பாட்டிற்கு வந்த இரு நாட்கள் மட்டுமே செயல்பட்ட உயர்கோபுர மின்விளக்கு, பின் பழுதடைந்ததாக அப்பகுதிமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், அப்பகுதிமக்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தி அடைந்துள்னர். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மின்விளக்கு அமைத்தும் பயன்பாடின்றி வீணாக உள்ளது.எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
28-May-2025