உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாயில் அடைப்பு சாலையில் சகதிநீர் தேக்கம்

வடிகால்வாயில் அடைப்பு சாலையில் சகதிநீர் தேக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஆனந்தாபேட்டை பிரதான சாலை வழியாக, மின்நகர், திருக்காலிமேடு,சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் பெய்யும்மழைநீர், மஞ்சள் நீர் கால்வாய் வாயிலாக வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் மாலை, காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழையால், மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புற சாலையில் குட்டை போல தேங்கிய மழைநீர், சகதிநீராக மாறியுள்ளது.எனவே, மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ