பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஓட்டுநர் சிக்கினார்
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஓட்டுநரான சிலம்பரசன், 35, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதை தட்டிக்கேட்ட அவரது கணவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். அதன்படி, தலைமறைவாக இருந்த ஓட்டுநரான சிலம்பரசனை, சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.