ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், 28.48 கோடி செலவில் திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக சென்னையைச் சேர்ந்த வேல்மோகன் மற்றும் உறுப்பினர்களாக வரதன், வசந்தி சுகுமாரன், ஜெகன்னாதன், விஜயகுமார் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நேற்று பொறுப்பேற்றனர்.இவர்களுக்கு காஞ்சிபுரம் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் பதவி ஏற்பு செய்து வைத்தார்.தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்ட மூலவர் சன்னிதி முன், கோவில் நிர்வாகத்தை நேர்மையாகவும், சிறப்பாக நடத்துவேன் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, சரக ஆய்வாளர் ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்,