மேலும் செய்திகள்
புதர்மண்டிய கால்வாய் சீரமைப்பது எப்போது?
06-Sep-2024
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாய் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரும் பணி, ஒரு வாரமாக நடந்து வருகிறது.இதில், ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை, மின்நகர் உள்ளிட்ட பகுதியில் துார்வாரிய கழிவுகளை கால்வாய் ஓட்டியுள்ள பகுதியில் கால்வாய்யோரம் போட்டுள்ளனர்.குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால் குப்பை கழிவுகள் மீண்டும் கால்வாயில் சரிந்து விழும் சூழல் உள்ளது.மேலும், சாலையோரம் உள்ள குப்பையால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, மஞ்சள்நீர் கால்வாயில் துார்வாரிய கழிவுகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
06-Sep-2024