உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தரைப்பாலத்தில் தடுப்பு கம்பி அமைக்க எதிர்பார்ப்பு

தரைப்பாலத்தில் தடுப்பு கம்பி அமைக்க எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:ராஜகுளத்தில் உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜகுளம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கரூர் கிராமம் வழியாக, முத்தியால்பேட்டை கிராமத்திற்கு செல்லும், பிரதான புறவழி சாலை செல்கிறது.இச்சாலையை கடப்பதற்கு, குதிரைக்கால் மடுவின் மீது, பல கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட தரைப்பாலம், கடந்த ஆண்டு கட்டி முடித்து, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது கம்பிகள் அமைக்கவில்லை.இதனால், அந்த தரைப்பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ